வெடி விபத்தில் 8 பேர் பலி எதிரொலி; தீவிர கண்காணிப்பில் போலீஸ்: பட்டாசு திரி கடத்திய 3 பேர் சிக்கினர்

வெடி விபத்தில் 8 பேர் பலி எதிரொலி; தீவிர கண்காணிப்பில் போலீஸ்: பட்டாசு திரி கடத்திய 3 பேர் சிக்கினர்

சாத்தூர் அருகே பட்டாசு கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்து 250 குரோஸ் பட்டாசு திரிகளை கைப்பற்றினர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாரத்தில் கடந்த ஜனவரியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் வட மாநில இளைஞர் இருவர், ஒரு பெண் உள்பட 8 பேர் பலியாகினர். தீக்காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவில் வருவாய்த்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக இயங்கிய 15 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கருந்திரி மருந்து தயாரிப்பு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தூர் வட்டாரத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் பட்டாசு ஆலைகளுக்கு பட்டாசு திரி தயாரித்து கொடுப்போர் குறித்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன் தொடர் நடவடிக்கையாக சாத்தூர்-சிவகாசி சாலை கோணம்பட்டி விலக்கில் சாத்தூர் போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக கடத்திச் சென்ற பட்டாசு திரிகள் இருந்தன.

இது தொடர்பாக சாத்தூரைச் சேர்ந்த மகேஸ்வரன் (30), அய்யப்பன் (40), சவுந்தர பாண்டியன் (23) ஆகியோரை கைது செய்து, ஆட்டோவில் இருந்த 250 குரோஸ் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in