மணப்பாட்டில் சுற்றி வளைக்கப்பட்ட படகு: மூன்றரை டன் பீடி இலைகளுடன் நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள்!

மணப்பாட்டில் சுற்றி வளைக்கப்பட்ட படகு: மூன்றரை டன் பீடி இலைகளுடன் நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு மூன்றரை டன் பீடி இலைகளை கடத்திச் சென்ற மீனவர்கள் சிக்கினர். அவர்களிடம் கடலோர காவல்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள் உள்ளிட்டவை கடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடலோர காவல்படையினர் தொடர் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கடலோர காவல்படையினருக்குத் தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கடலோர காவல்படையினர் வஜ்ரா கப்பல் மூலம் மணப்பாட்டில் இருந்து 40 மைல் தொலைவில் ஒரு படகு நின்றது. சந்தேகப்படும்படி இருந்த அந்தப் படகை கடலோரக் காவல்படையினர் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து சோதனை செய்தபோது அந்தப்படகில் மூன்றரை டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து படகில் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் காட்வின், பிச்சையா, மில்டன், கிங், டார்ஜன், ரட்சகர் ஆகிய 6 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்த பீடி இலைகளின் மதிப்பு 30 லட்சம் ஆகும். இவற்றையும், மீனவர்களையும் சுங்கத்துறையினர் முன்பு ஆஜர்படுத்த கடலோரக் காவல்படையினர் அழைத்துச் செல்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in