துபாயிலிருந்து சுத்தியலில் மதுரைக்கு தங்கம் கடத்திய வாலிபர்!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ. 10 லட்சத்து 23 ஆயிரத்து 504 மதிப்பிலான 198.2 கிராம் தங்கத்தை இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து நேற்று வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, துபாய் விமானத்தில் வந்த 182 பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். அதில் மதுரையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரை சோதனை செய்த போது, அவர் சுத்தியல் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.

அதில், 198.2 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 10 லட்சத்து 23 ஆயிரத்து 504 இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in