இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்: தமிழகத்தில் எந்த இடத்தில் அமைகிறது தெரியுமா?

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்: தமிழகத்தில் எந்த இடத்தில் அமைகிறது தெரியுமா?

தமிழகத்தில் தேவாங்கு  சரணாலயம் அமைய உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தேவாங்கிற்கென தனி சரணாலயம் அமைவது இதுவே முதல்முறை.

தேவாங்கு தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மரத்தில் மட்டுமே வாழும் சிறிய வகை உயிரினம். வடக்கு பக்கம் மட்டுமே திரும்பி அமரும் அரியவகை பாலூட்டி இனம். பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த விலங்கைப் பயன்படுத்தி கடலில் பயணம் மேற்கொள்ளும் வணிகர்கள் திசையைக் கண்டறிந்தனர் என பல்வேறு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவாங்கு விலங்கின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணம் நிறைந்தவை என நம்பப்படுவதால் அந்த விலங்கு வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனால் தேவாங்கு இனம் முற்றிலும் அழியும் நிலை உள்ளது.

அழிந்து வரக்கூடிய தேவாங்கு இனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806  ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதியில் தேவாங்கு வாழ்விடப் பகுதியாக அறிவித்துள்ளது. அங்குத் தேவாங்கு சரணாலயம் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது.  தேவாங்கு வாழ்விடத்தை, மேம்படுத்துவதும்,  பாதுகாப்பதும், அவற்றினுடைய  எண்ணிக்கையைப் பெருக்க  முடியும் என்கிற அடிப்படையில்,  தற்போது தமிழக அரசானது இந்தியாவின் முதல் தேவாங்கு  சரணாலயத்தை அமைக்க முன்வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in