ராணுவ வீரர் படுகொலை கவலைக்குரிய விஷயம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநரை, அண்ணாமலையுடன் சந்தித்த முன்னாள் ராணுவ வீரர்கள்
தமிழக ஆளுநரை, அண்ணாமலையுடன் சந்தித்த முன்னாள் ராணுவ வீரர்கள்’’ராணுவ வீரர் படுகொலை கவலைக்குரிய விஷம்’’ - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி..!

’’கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலரால் தாக்கப்பட்டு ராணுவ வீரர் உயிரிழந்திருப்பது கவலைக்குரிய விஷயம்’’ என தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது உறவினர்களால் ராணுவ வீரர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவின் முன்னாள் ராணுவ வீரர்கள் அணி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது, மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்து வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய அண்ணாமலை, இன்று மாலை டெல்லி சென்று அமித்ஷாவை நேரடியாக சந்தித்து புகார் அளிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in