எச்சரிக்கையை மீறி சென்றனர்; வெள்ளத்தில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட 6 பேர்: 2 மணி நேரம் போராடி மீட்பு

மீட்க போராடும் பொதுமக்கள்
மீட்க போராடும் பொதுமக்கள்

காட்டாற்று வெள்ளத்தில் காரில் சிக்கிய ஆறு பேரை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில், வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டியில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, பாலகிருஷ்ணன், மணிகுமார், சண்முகம், பாண்டியன், பாலசுப்ரமணி, செல்வராஜ் ஆகியோர் காரில் வெள்ளோடு பகுதியில் இருந்து வேலையை முடித்துவிட்டு திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த வள்ளிப்பட்டி தரைப்பாலத்தில் காரை இயக்க முயற்சித்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரின் பேச்சையும் மீறி காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலத்தில் காரை இயக்கிச் சென்றனர். இதில், கார் தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த தடுப்புக்கம்பி ஒன்றில் கார் சிக்கியதால், கார் மேலும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படாமல் அங்கேயே நின்றது.

வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேர்
வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேர்

அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த கூம்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் இதனைக் கண்டார். உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த ஊர்மக்கள் டிராக்டர் உதவியுடன் கயிறு கட்டி காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி காரில் சிக்கிய ஆறு பேரையும் சுமார் இரண்டு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in