அப்பளம் போல் நொறுங்கியது கார்; பறிபோன 6 உயிர்கள்: துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நடந்த துயரம்

அப்பளம் போல் நொறுங்கியது கார்; பறிபோன 6 உயிர்கள்: துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நடந்த துயரம்

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் உறவினர்கள் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலத்தில் இருந்து சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சிலர் ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தனர். ஆத்தூர் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது சொகுசு பேருந்தும் ஆம்னி காரும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்துக் குறித்த தகவல் கிடைத்ததும் ஆத்தூர் போலீஸார் மற்றும் கோட்டாட்சியர் சரண்யா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விரைந்து சென்று காருக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். இதில் காரில் பயணித்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தியா, சரண்யா, ராஜேஷ், ரம்யா, சுகன்யா ஆகிய ஐந்து பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

காருக்குள் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தன்ஷிகா என்ற 11 வயது சிறுமி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். காயங்களுடன் மீட்கப்பட்ட தன்சிகா, பெரியண்ணன், புவனேஸ்வரி, கிருஷ்ணவேணி, சுதா, உதயகுமார் ஆகிய ஆறு பேருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் ஆறுபேர் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in