செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அசத்திய நடிகர் சிவகார்த்திகேயனின் மகள்!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அசத்திய நடிகர் சிவகார்த்திகேயனின் மகள்!

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தினார்.

செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்றது. அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

மகளிர் பிரிவில் இந்திய ஏ' அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெண்கலம் தான் வென்றது. மேலும் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

இதைத் தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பூப்பந்தாட்டம், கண்ணாமூச்சி, சதுரங்கம் என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து அசத்தினார். அவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in