
இயக்குநர் சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவுடன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
தற்போது ‘வணங்கான்’, ‘வாடிவாசல்’ ஆகிய படங்களில் சூர்யா பிசியாக இருக்கிறார். இந்த நிலையில், தனது 42 படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, இயக்குநர் சிவா மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், “ படப்பிடிப்பு தொடங்குகிறது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை” என தெரிவித்துள்ளார்
சூர்யாவுடன் இணையும் திரைப்படம் குறித்து இயக்குநர் சிறுத்தை சிவா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எங்கள் புதிய படத்தை கடவுளின் ஆசீர்வாதத்துடனும், அனைத்து ரசிகர்களின் நல்வாழ்த்துக்களுடனும் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஊடக நண்பர்கள், சினிமா ஆர்வலர்கள், நலம் விரும்பிகள், சூர்யா சார் , ஸ்டுடியோகிரீன், யுவி கிரியேஷன்ஸ் அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.