பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்களை வைத்திருந்தால்... பொதுமக்களை எச்சரிக்கும் எஸ்ஐடி தலைவர்!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோவை செல்போன், லேப்டாப்பில் இருந்தால் உடனடியாக நீக்க வேண்டும் என்று காவல் துறை சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) தலைவர் வி.கே.சிங் எச்சரித்துள்ளார்.

கா்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பியும், தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொலிகளாக பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் மீண்டும் போட்டியிட்டார். அந்த தொகுதியின் வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பு இந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகியன. இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பூகம்பத்தை கிளப்பியது. இதனால் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச்சென்று விட்டார். அவரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு மாற்றியது. இதனை அடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து பிரஜ்வல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அவரது தந்தை ரேவண்ணா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரேவண்ணா மற்றும் பிரஜ்வல்
ரேவண்ணா மற்றும் பிரஜ்வல்

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் வி.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்," பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் வைத்திருப்பதும் குற்றம். எந்த ஒரு நபர், செய்திகளை உருவாக்கி, சேமித்து அனுப்புகிறாரோ, அத்தகைய நபர்கள் செய்தியை உருவாக்குபவர்களாக கருதப்படுவார்கள். எனவே, பிரஜ்வல் வீடியோக்களை வைத்திருந்தால் உடனடியாக நீக்கிட வேண்டும். அப்படி . நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in