அந்தரங்க வீடியோ எடுத்து அக்காவை மிரட்டிய சகோதரி: காதலனுடன் சேர்ந்து பணம் பறிக்க திட்டமிட்டது அம்பலம்

அந்தரங்க வீடியோ எடுத்து அக்காவை மிரட்டிய சகோதரி: காதலனுடன் சேர்ந்து பணம் பறிக்க திட்டமிட்டது அம்பலம்

இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க 20 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய அப்பெண்ணின் சகோதரி, அவரது காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். " உன்னுடைய அந்தரங்க வீடியோ என்னிடம் இருக்கிறது. அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் 20 ஆயிரம் ரூபாய் கொடு" என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண், இது தொடர்பாக டெல்லி போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

இளம்பெண்ணுக்கு வந்த போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, அது தேவராஜ் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

தேவராஜை டெல்லியைச்சேர்ந்த இளம்பெண் காதலித்துள்ளார். ஆனால், இவர்களின் காதலுக்கு அப்பெண்ணின் மூத்த சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்று அவரது இளைய சகோதரி நினைத்தார். இதனால் அவருக்குத் தெரியாமல் அவரது அந்தரங்க வீடியோவை எடுத்து தனது காதலன் தேவ்ராஜுடன் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து தனது சகோதரியிடம் பணம் கேட்டு மிரட்டலாம் என அவர் தனது காதலனுக்கு ஆலோசனை கொடுத்தார்.

இதையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட தேவராஜ், 20 ஆயிரம் கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களில் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியது தெரிய வந்தது.

இதையடுத்து தேவராஜ் மற்றும் அவரது காதலியை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோவை மீட்டுள்ளனர். தன் உடன்பிறந்த சகோதரியின் அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறிக்க அவரது தங்கையே முயற்சி செய்த சம்பவம் டெல்லி போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in