`உன்னைக் காதலிக்கிறேன்'; மாணவிக்கு ஆசைகாட்டி பாலியல் தொல்லை: சிக்கினார் பாட்டு வாத்தியார்

`உன்னைக் காதலிக்கிறேன்'; மாணவிக்கு ஆசைகாட்டி பாலியல் தொல்லை: சிக்கினார் பாட்டு வாத்தியார்

பாடல் பயில வந்த 11-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த பாட்டு வாத்தியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் வாசித்து வரும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் அம்பேத்கர் நகரில் வசித்து வரும் சாமுவேல் என்பவரிடம் பாட்டு பயின்று வந்துள்ளார். 4 வருடங்களாக மாணவி பாட்டு பயின்று வந்துள்ள நிலையில் மாணவியை காதலிப்பதாக பாட்டு வாத்தியார் சாமுவேல் ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து மாணவி பாட்டு வாத்தியாருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் செல்போனில் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார் பாட்டு வாத்தியார் சாமுவேல். இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாட்டு வாத்தியார் சாமுவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in