கஞ்சா செடி வளர்த்தால் சினிமாவில் சான்ஸ் கிடைக்கும்: மந்திரவாதி கொடுத்த ஐடியாவால் கம்பி எண்ணும் பாடகர்!

கஞ்சா செடி வளர்த்தால் சினிமாவில் சான்ஸ் கிடைக்கும்: மந்திரவாதி கொடுத்த ஐடியாவால் கம்பி எண்ணும் பாடகர்!

கஞ்சா செடி வளர்த்தால் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என மந்திரவாதி கூறியதால் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, பூதி வழி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கிராமிய பாடகர். இவர் சினிமாவில் பாடகராக விரும்பினார். இதையறிந்த மந்திரவாதி ஒருவர், ராதாகிருஷ்ணனை அணுகியுள்ளார்.

வீட்டில் கஞ்சா வளர்த்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த மந்திரவாதி ஆலோசனை வழங்கியுள்ளார். இதை நம்பி தனது வீட்டில் கஞ்சா செடியை பாடகர் ராதாகிருஷ்ணன் வளர்த்துள்ளார். 20 கஞ்சா செடிகளை அவர் பையில் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
ஐந்து மாதமானதால் கஞ்சா பூவிலிருந்து வாசம் வெளியே வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கலால்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கேரள கலால்துறை அதிகாரிகள், ராதாகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது 20 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் ராதாகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in