ஏப்ரல் 1 முதல் மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது

இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவிப்பு
ஏப்ரல் 1 முதல் மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது

ஏப்ரல் 1-ம் தேதி மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் 10.7 சதவிகிதம் உயர்கிறது எனவும் இதுவே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலையாகும் என்றும் இதனால் தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலிலுள்ள 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலில் பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோதை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள் போன்ற மருந்துகள் அடங்கும் என தெரிவித்துள்ள இந்திய தேசிய மருந்துகள் ஆணையம், கரோனா தொற்று மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பயன் படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in