‘பிஎஃப்ஐ அமைப்பின் நிதி மையமாக மாநிலத்தை மாற்றிய முன்னாள் முதல்வர்!’

மத்திய அமைச்சர் ஷோபா காரன்தலாஜே கடும் விமர்சனம்
‘பிஎஃப்ஐ அமைப்பின் நிதி மையமாக மாநிலத்தை மாற்றிய முன்னாள் முதல்வர்!’

காங்கிரஸ் கட்சி. வழிநடத்துவதற்கு ஒரு கேப்டன் இல்லாத கப்பல் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை அமைச்சர் ஷோபா காரன்தலாஜே கூறியிருக்கிறார். மேலும், தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வளர்ச்சிக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா உடந்தையாக இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

உடுப்பியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் இந்திய ஒற்றுமைப் பயணம் குறித்து விமர்சித்தார். “தேசப் பிரிவினை நடந்த இடத்தில்தான் காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக யார் காரணம்?” என்று கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான், சீனா, வங்கதேச நாடுகளின் எல்லைகள் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நடைப் பயணம் மேற்கொள்ளட்டும் என்று கூறிய அவர் காங்கிரஸ் கட்சி. வழிநடத்துவதற்கு ஒரு கேப்டன் இல்லாத கப்பலைப் போல ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, அம்மாநிலத்தை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிதி மையமாக மாற்றிவிட்டார் என அவர் குற்றம்சாட்டினார். சித்தராமையா முதல்வராக இருந்தபோது, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அவசியம் என்றால், எஸ்டிபிஐ கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in