வாகனச்சோதனையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்: பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்

எஸ்.ஐ. சங்கர்
எஸ்.ஐ. சங்கர்வாகனச்சோதனையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்: பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்

சென்னை அயனாவரத்தில் அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கர் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தாக்குதல் நடத்தி தப்பியோடிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை முழுவதும் போலீஸார் விடிய விடிய வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலையில் அயனாவரத்தில் உதவி ஆய்வாளர் சங்கர் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்களை வழிமறித்து விசாரித்துள்ளார்.

அந்த நபர்கள் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கொண்டு வந்த இரும்பி கம்பியைக் கொண்டு உதவி ஆய்வாளர் சங்கரை தலையில் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த ஆய்வாளர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மூன்று நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in