`1500 ரூபாய் கொடுத்தால் புகாரை விசாரிக்கிறேன்'- லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரை சிக்கவைத்த பெண்

1500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட்
1500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட்`1500 ரூபாய் கொடுத்தால் புகாரை விசாரிக்கிறேன்'- லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரை சிக்கவைத்த பெண்

கணவன், மனைவி இடையேயான பிரச்சினை குறித்து விசாரணை நடத்த 1500 ரூபாய் பணத்தை புகார் கொடுத்த பெண்ணிடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளது. இங்கு சுப்புலெட்சுமி என்பவர் சார் ஆய்வாளராக உள்ளார். இவரிடம், ஷோபியா என்பவர் தன் குடும்பப் பிரச்சினை தொடர்பாக புகார் மனுகொடுத்து இருந்தார். தனக்கும், தன் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பது தொடர்பாக அவர் புகார் கொடுத்தார்.

ஷோபியாவின் புகாரை விசாரிக்காமல் வேண்டுமென்றே எஸ்.ஐ சுப்புலெட்சுமி காலம் கடத்தினார். ஒருகட்டத்தில், அந்தப் புகாரை விசாரிக்க எஸ்.ஐ சுப்புலெட்சுமி, புகார்தாரரான ஷோபியாவிடம் 1500 ரூபாய் லஞ்சமாகக் கேட்டார். பணத்தைக் கொடுத்த ஷோபியா இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக அருப்புக்கோட்டை டி.எஸ்.பி கரூண் காரட் விசாரணை நடத்தினார். இதிலும் எஸ்.ஐ சுப்புலெட்சுமி பணம் பெற்றுக்கொண்டது தெரியவந்தது. இதை டி.எஸ்.பி அறிக்கையாக மதுரை சரக டி.ஜ.ஜி பொன்னிக்கு அனுப்பியிருந்தார். இந்த நிலையில் டி.ஜ.ஜி பொன்னி இன்று, எஸ்.ஐ சுப்புலெட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in