தடையை மீறி மின்னல் வேகத்தில் வந்த லாரி: பைக்கில் சென்ற கோவில்பட்டி எஸ்.ஐ உயிரிழப்பு

கோவில்பட்டி எஸ்.ஐ  முத்துராஜ்
கோவில்பட்டி எஸ்.ஐ முத்துராஜ்தடையை மீறி மின்னல் வேகத்தில் வந்த லாரி: பைக்கில் சென்ற கோவில்பட்டி எஸ்.ஐ உயிரிழப்பு

கோவில்பட்டியில் இன்று காலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிர் இழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக பணியாற்றி வந்தவர் முத்துராஜ். இவர் இன்று காலையில் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முத்துராஜ் படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் சிறப்புக் காவல் உதவியாளர் முத்துராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி தபால் நிலையம் அருகில் பகல் நேரத்தில் குறிப்பாக காலை 8 மணிக்கு மேல் லாரிகள் வருவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த விதியைப் பின்பற்றாமல் லாரிகள் பகல் நேரத்திலும் வருவதால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவதாகக் கோவில்பட்டிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in