சென்னையில் பற்றி எரிந்த ஷோரூம்: அலறியடித்து ஓடிய ஊழியர்கள்: எலும்புக்கூடான 40 எலெக்ட்ரிக் பைக்குகள்!

எலெக்ட்ரிக் பைக்  ஷோரூம்
எலெக்ட்ரிக் பைக் ஷோரூம்சென்னையில் பற்றி எரிந்த ஷோரூம்: அலறியடித்து ஓடிய ஊழியர்கள்: எலும்புக்கூடான 40 எலெக்ட்ரிக் பைக்குகள்!

சென்னையில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட பைக்குகள் எரிந்து சேதமானது.

சென்னை திருமங்கலம்- அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் ஓக்கினாவா எலெக்ட்ரிக் பைக் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இன்று மாலை 4.25 மணியளவில் மின்கசிவு காரணமாக பைக் ஷோரூமில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் போராடி 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம்

இந்த தீ விபத்தில் சர்வீஸ்காக வந்த பைக் மற்றும் புது பைக் உட்பட 40க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் பைக்குகள் தீயில் எரிந்து எலும்புக்கூடாது. இது குறித்து திருமங்கலம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஷோரூமில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இத்தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in