போலீஸ்காரரை வெட்டி விட்டுத் தப்ப முயற்சி: ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

போலீஸார் சுட்டு 
பிடித்த வினோத்
போலீஸார் சுட்டு பிடித்த வினோத்போலீஸ்காரரை வெட்டி விட்டுத் தப்ப முயற்சி: ரவுடி மீது துப்பாக்கிச்சூடு


மதுரையில் சமீபத்தில் நடந்த கொலை சம்பவ இடத்தை அடையாளம் காண அழைத்துச் சென்றபோது போலீஸாரை அரிவாளால் வெட்டிய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடந்தது.

மதுரை ஒத்தக்கடை அருகே உலகனேரியை சேர்ந்தவர் டோரா பாலா (எ)  பாலமுருகன். இவர் உத்தங்குடி ரோடு வளர் நகர் அருகே ராஜிவ் காந்தி நகரில் பிப்.22-ல் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை  தொடர்பாக வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் 
ஆகியோரை மாட்டுத்தாவணி போலீஸார் கைது செய்தனர்.

இச்சம்பவம் நடந்த இடங்களை  அடையாளம் காட்ட கொலை வழக்கின் முதல் குற்றவாளியான  உலகனேரியைச் சேர்ந்த ரவுடி வினோத்தை (24) போலீஸார் இன்று அழைத்து சென்றனர். 

அப்போது வண்டியூர் பகுதியில் சென்று அடையாளம் காட்டியபோது வினோத் பதுக்கி வைத்திருந்த அரிவாளால் போலீஸ்காரர்  சரவணகுமார் என்பவரை வெட்டிவிட்டு தப்ப முயன்றார். 

அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜாங்கம்,  வினோத்தின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். இதில் காயமடைந்த  வினோத், மதுரை அரசு  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in