குடித்த ஜூஸ்சுக்குப் பணம் கேட்ட கடை உரிமையாளர்: அறைந்த ஏட்டு சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்  செய்யப்பட்ட ஏட்டு பாண்டியன்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டு பாண்டியன் குடித்த ஜூஸ்சுக்குப் பணம் கேட்ட கடை உரிமையாளர்: அறைந்த ஏட்டு சஸ்பெண்ட்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடித்த ஜூஸ்சுக்குப் பணம் கேட்ட கடை உரிமையாளரை அறைந்த ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் சுரேஷ், (27). இவர் பல்லடம் அருகே சின்னகரையில்  ஜூஸ் கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், ஜூஸ் கடைக்கு வந்த பல்லடம் போலீஸ் ஏட்டு பாண்டியன், இக்கடையில் 2 முறை  ஜூஸ்  குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இருவருடன் சென்று ஜூஸ் குடித்த பாண்டியன் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். குடித்த ஜூஸ்சுக்குப் பணம் கேட் கடை உரிமையாளர் சுரேஷை பாண்டியன் அறைந்து விட்டு சென்றார்.

ஜூஸ் கடை உரிமையாளரை கன்னத்தில் ஏட்டு அறைந்த காட்சி சிசிடிவியில் பரவியது. இதனால் ஜூஸ் குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் கடை ஊழியரை தாக்கிய ஏட்டு பாண்டியனை திருப்பூர் எஸ்பி சாசாங் சாய் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in