உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை - காதலனுடன் சென்றதால் ஆத்திரம்!

மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை
மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் நந்தினி. தனது மகள் காதலித்ததை அறிந்த குமார், அவசர, அவசரமாக மகளின் காதலை பிரித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், மகளின் கணவருக்கு எலும்பு புற்று நோய் ஏற்பட்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில், நந்தினி தன் காதலரை மணந்துகொண்டதாக தெரிகிறது. மகளின் இந்த செயலால் கோபமடைந்த தந்தை மகேஷ் தனது மகள் நந்தினிக்கு, இறந்துவிட்டார் என்பது போல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரில் ஒட்டினார். அது மட்டுமல்லாமல் அவர் தனது மகள் உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in