பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டல்; முன்னாள் காதலர்கள் டார்ச்சர்: காதல் ஜோடி தற்கொலையில் அதிர்ச்சி தகவல்

பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டல்; முன்னாள் காதலர்கள் டார்ச்சர்: காதல் ஜோடி தற்கொலையில் அதிர்ச்சி தகவல்

சென்னையில் தங்கும் விடுதியில் மேற்கு வங்க காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் காதலர்கள் பாலியல் தொல்லை அளித்ததால் காதலனை சென்னைக்கு வரவழைத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒயிட் ஹவுஸ் விடுதியில் கடந்த 7-ம் தேதி மேற்குவங்கத்தை சேர்ந்த காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளம்பெண்ணும், வாலிபரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். உடல்களை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இளம்பெண் அர்பிதா 3 நாட்களுக்கு முன்பே உயிரிழந்ததால் உடல் அழுகிய நிலையிலும், முகத்தில் தலையணை இருந்ததாலும், சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரசன்ஜித் கோஷ்(23) மற்றும் அர்பிதா பால்(20) என்பதும் காதலர்களான இவர்கள் கடந்த 3-ம் தேதி கணவன்- மனைவி எனக்கூறி திருவல்லிக்கேணியில் லாட்ஜில் அறை எடுத்து தங்கியது தெரியவந்தது. கடந்த 3 நாட்களாக இருவரும் அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததும் அறையில் வங்க மொழியில் இளம்பெண் எழுதி இருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், எங்களது தற்கொலைக்கு நரேஷ், ஜித்தேந்தர், ராஜா ஆகியோர் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார், தற்கொலைக்கு தூண்டியதாக ஆந்திராவை சேர்ந்த நரேஷ் குமார் (22) மற்றும் ராஜா(32) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் அர்பிதாபால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரெயின் டிரி ஹோட்டலில் தங்கி வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஜித்தேந்தர் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து அர்பிதாபால் தி.நகரில் உள்ள பிரபல ஜிஆர்டி ஹோட்டலில் பணிக்கு சேர்ந்துள்ளார். அங்கு நரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அர்பிதாபால் ஜித்தேந்தரை காதலித்து வருவதை அறிந்து கொண்ட நண்பர் ராஜா உடனே நரேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அர்பிதா, நரேஷ், ஜித்தேந்தரை ஒரே நேரத்தில் ஏமாற்றிய விஷயம் இருவருக்கும் தெரிந்துள்ளது. இதையடுத்து அர்பிதாவிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இவர்கள் காதலித்த போது அர்பிதாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை காண்பித்து நரேஷ் குமார், ஜித்தேந்தர், ராஜா ஆகியோர் பாலியல் உறவுக்கு இணங்குமாறு அர்பிதாவை மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த அர்பிதா என்ன செய்வது என்று தெரியாமல் மற்றொரு காதலரான மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரசன்ஜித் என்பவரை கடந்த 3-ம் தேதி சென்னைக்கு வரவழைத்து திருவல்லிக்கேணி விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அர்பிதா கடிதம் எழுதி வைத்துவிட்டு தான் கொண்டு வந்த விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதை பற்றி அறியாத பிரசன்ஜித் வெளியே சென்றால் போலீஸ் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் இரண்டு நாட்களாக சடலத்துடன் இருந்துவிட்டு பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவான உள்ள ஜித்தேந்தரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in