தங்கையின் காதல் கணவனை கொல்ல முயன்ற அண்ணன்; தடுத்த எஸ்.ஐ படுகாயம்: குலசை காவல்நிலையத்தில் அதிர்ச்சி

எஸ்.ஐ படுகாயம்
எஸ்.ஐ படுகாயம் தங்கையின் காதல் கணவனை கொல்ல முயன்ற அண்ணன்; தடுத்த எஸ்.ஐ படுகாயம்: குலசை காவல்நிலையத்தில் அதிர்ச்சி

குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் காதல் தம்பதி குறித்து வந்த புகாரின் பேரில் பெண்ணின் குடும்பத்துடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது பெண்ணின் அண்ணன் ஸ்குரு டிரைவரால் தன் தங்கையின் காதலனை குத்தப்பாய, அதை தடுத்த எஸ்.ஐ மீது குத்துப்பட்டது. எஸ்.ஐ படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கோகுல் சந்திரசேகர்(23). அதே பகுதியைச் சேர்ந்தவர் பவானி(23). கோகுல் சித்தார்த் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஒரு ஆலையில் வேலை செய்து வருகிறார். பவானி தூத்துக்குடியில் அரசு செவிலியர் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இவர்கள் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்துள்ளனர். இந்தக் காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 3-ம் தேதி கோயிலில் திருமணம் செய்தனர். கன்னியாகுமரியில் புது வாழ்க்கையைத் தொடங்கினர்.

இந்தநிலையில் பவானியை, கோகுல் சந்திரசேகர் கடத்திவிட்டதாக அவரது குடும்பத்தினர் குலசேகரன்பட்டிணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் ஆஜராக காதல் தம்பதிகள் குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம் எஸ்.ஐ ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார். அப்போது அங்குவந்த பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி(26) தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் தன் தங்கையின் கணவரைக் கொல்லப் பாய்ந்தார்.

இதைப் பார்த்து சுகாதரித்த எஸ்.ஐ ரவிச்சந்திரன் தடுக்க முயலவே, ஸ்குரு டிரைவர் அவரது வலதுகையில் குத்தி, கோகுல் சித்தார்த்தின் கழுத்துப் பகுதியிலும் லேசாகக் குத்தியது. விசாரணை நடத்திய எஸ்.ஐ ரவிச்சந்திரன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸார் முத்துப்பாண்டியை கைது செய்தனர். காயம்பட்ட கோகுல் சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in