விவாகரத்து வதந்தி: சானியா மிர்சாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சோயப் மாலிக்!
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் அவரின் கணவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் குறித்த விவாகரத்து வதந்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் சானியாவின் பிறந்தநாளுக்கு மாலிக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சோயப் மாலிக் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பிறந்தநாள் வாழ்த்தில், " சானியா மிர்சாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் மிகவும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். இந்த நாளை முழுமையாக அனுபவிக்கவும்" என தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சாவுக்கு இன்று 36 வயது. 2010- ல் சானியாவுக்கும், மாலிக்கிற்கும் திருமணமாகி அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் துபாய்க்கு குடிபெயர்ந்தனர்.
இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சாவின் சில பதிவுகளால் அவர்கள் பிரிகிறார்கள் என்ற வதந்தி பரவியது. "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண" என்று நவம்பர் 8 -ம் தேதி பதிவிட்டிருந்தார். அதுபோல அவர் சமீபத்தில் தனது மகன் இஷான் மிர்சா மாலிக்குடன் உள்ள ஒரு படத்தைப் பகிர்ந்து, "கடினமான நாட்களில் என்னைக் கடந்து செல்லும் தருணங்கள்" என தெரிவித்திருந்தார். எனவே சானியா மிர்சா - சோயப் மாலிக் விவாகரத்து வதந்தி வேகமாக பரவியது.
ஆனால், இவர்களின் சமீபத்திய பதிவுகள் ஒரு விளம்பர ஸ்டண்ட் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்த சூழலில்தான் சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் இருவரும் இணைந்து நடத்தும் புதிய பேச்சு நிகழ்ச்சியான "தி மிர்சா மாலிக் ஷோ" குறித்து கடந்த வாரம் அறிவித்தனர்.