தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்!

சிவ்தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். அவருடைய பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமைச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தின் 49-வது புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. சிவ்தாஸ் மீனா நகராட்சி நிர்வாகத்துறை நிர்வாக முதன்மைச் செயலாளராக பதவி வசித்து வந்தார். 1989 பேட்ஜ் தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா அரசுத்துறைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தின் டிஜிபியாக இருந்து வரும் சைலேந்திரபாபுவின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய டிஜிபி நியமிக்கப்பட இருக்கிறது. தற்போது சென்னை காவல்துறை ஆணையராக இருந்து வரும் சங்கர் ஜிவால் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in