ரேஸில் சிவன், இளையராஜா, தமிழிசை: அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

ரேஸில் சிவன், இளையராஜா, தமிழிசை: அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலையில் முடிவடைய உள்ள நிலை புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஆளும் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை கடந்த 2017-ம் ஆண்டு குடியரசுத் தலைவராக நியமித்தது. அவரது பதவி காலம் வரும் ஜூலையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஆளும் பாஜக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதில், ஆளுநர் தமிழிசை மீது தெலங்கானா அரசு பகீரங்க குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதனால், அவருக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில், பிரதமர் மோடியை அம்பேக்தருடன் ஒப்பிட்டு பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ள இளையராஜாவும் அந்த ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த சர்ச்சையில் சிக்காத முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவனும் போட்டியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஜூலை 24-ம் தேதிக்குள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இந்த தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றவர்கள். கடந்த 2017-ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் 65.5 வாக்கு பலத்துடன் இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, இந்த தேர்தலில் 48.8 சதவீத வாக்குகளே உள்ளன. இந்த சூழ்நிலையில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் கடும் போட்டி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in