மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்துக்கொலை: சிபிசிஐடியிடம் சிக்கிய காப்பக ஊழியர்கள்

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்துக்கொலை: சிபிசிஐடியிடம் சிக்கிய காப்பக ஊழியர்கள்

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை காப்பக ஊழியர்கள் மூவரே சேர்ந்து கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் எம்.டி.ஆர் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 33 வயதான வாலிபர் ஒருவர் கடந்த மாதம் 13-ம் தேதி திடீரென புகுந்தார். திருடன் என நினைத்து அவரைத் தாக்கிய பொதுமக்கள் அவரை அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் அவ்வாறு நடந்துகொண்டதும் தெரியவந்தது.

இதையடுங்தது தங்கபாண்டியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீஸார், அவரைக் காப்பகத்தில் சேர்க்கவும் அறிவுறுத்தினர். அதன்படி ராமானுஜபுரம் பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் அவரைச் சேர்த்தனர். ஆனால், திருட வந்தவரை காப்பகத்திற்கு அனுப்பி வைத்ததாக எம்.டி.ஆர் நகர்வாசிகள் போராட்டத்தில் குதிக்க காப்பகத்தில் சேர்க்கப்பட்ட தங்கபாண்டியை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். மீண்டும் அவரை அன்று இரவே காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், மறுநாள் தங்கபாண்டி உடல்நிலை மோசமாகவே அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி தங்கபாண்டி உயிர் இழந்தார். இதற்கு எதிராக தங்கபாண்டியின் குடும்பத்தி்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் காவல் நிலையமும் சம்பந்தப்பட்டு இருப்பதால் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், தங்கபாண்டியை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களான சிவகாசியைச் சேர்ந்த வினோத்குமார்(24), கல்குறிச்சியைச் சேர்ந்த ஆகாஷ்(21), சுப்பிரமணி(22) ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கபாண்டியின் கை, கால்களைக் கட்டி அவர்மேல் ஏறி அமர்ந்து கொடுமையும் செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காப்பக ஊழியர்கள் வினோத்குமார், ஆகாஷ், சுப்பிரமணி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in