செல்போனிலும், நேரிலும் பாலியல் டார்ச்சர்: நகைக்கடை உரிமையாளரை சிறையில் தள்ளிய இளம்பெண்

செல்போனிலும், நேரிலும் பாலியல் டார்ச்சர்: நகைக்கடை உரிமையாளரை சிறையில் தள்ளிய இளம்பெண்

நகைக்கடையில் வேலை பார்த்த இளம்பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில்,  ஜெயினுலாபுதீன் என்பவர் கவரிங் நகைக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் மூன்று பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில்,  கடையில் வேலை பார்த்து வந்த 22 வயதான பெண்ணுக்கு, கடையின் உரிமையாளர் ஜெயினுலாபுதீன் நேரிலும், செல்போனிலும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளரான ஜெயினுலாபுதீனை அழைத்து போலீஸார் விசாரித்த போது, உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டப்படி,  பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்துதல்,  ஆபாசமாக பேசுதல்,  பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல்,  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஜெயினுலாபுதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஜெயினுலாபுதீனுக்கு, இரண்டு மகன், ஒரு மகள் இருப்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in