தாய் கண்முன்பே மாணவிக்கு நடந்த கொடுமை: போக்சோவில் சிக்கினார் வாலிபர்

தாய் கண்முன்பே மாணவிக்கு நடந்த கொடுமை: போக்சோவில் சிக்கினார் வாலிபர்

கன்னியாகுமரி, சங்கரன்கோவிலில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்து அடிக்கடி பாலியல் தொல்லைக் கொடுத்துவந்துள்ளார் கருப்பசாமி. இதை அந்த மாணவி தன் பெற்றோரிடம் சொல்ல, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கருப்பசாமியை அழைத்து எச்சரித்தனர். அதன் பின்னரும் மாணவியின் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த கருப்பசாமி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதை வீட்டுக்கு வந்ததும் பார்த்த மாணவியின் தாய், கருப்பசாமியைக் கண்டித்தார். உடனே மாணவியின் தாய்க்கு கருப்பசாமி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் கருப்பசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம், நன்றிக்குழி பகுதியைச் சேர்ந்த 16 வயதே ஆன மாணவி ஒருவர், தனது ஊரைச் சேர்ந்த தனேஷ்(20) என்னும் வாலிபர் தன்னிடம் நெருக்கமாகப் பழகி பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார். அதன்பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் தனேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in