அளவுக்கு மீறிய போதை; வீட்டிற்கு அழைத்துச் சென்று மாடலிங் பெண் பாலியல் வன்கொடுமை: தோழி உள்பட 4 பேர் கைது

அளவுக்கு மீறிய போதை; வீட்டிற்கு அழைத்துச் சென்று மாடலிங் பெண் பாலியல் வன்கொடுமை: தோழி உள்பட 4 பேர் கைது

கேரள மாநிலம், கொச்சியில் மாடலிங் துறையைச் சேர்ந்த பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்கிய பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சினை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தன் சக தோழியுடன் நேற்று மதுபாருக்குச் சென்றிருந்தார். இரவு, அவர் போதையில் இருந்த போது மூன்று ஆண்கள் அவரிடம் வீட்டில் சென்றுவிடுவதாக அழைத்துச் சென்றனர். அந்த பெண் தோழியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு மிகக் கொடுமையான அளவுக்கு பாலியல் சீண்டலுக்கு ஆளான அந்த மாடலிங் பெண் இப்போது களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடலிங் பெண் வீட்டில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் சீண்டலுக்கு ஆளானாரா? அல்லது காரிலேயே பாலியல் சீண்டல் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. இந்தக் குற்றச்சம்பவம் தொடர்பாக மாடலிங் பெண்ணின் தோழி உள்பட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காக்கநாட்டில் உள்ள மாடலிங் பெண்ணின் வீட்டில் வைத்து பாலியல் சீண்டல் நடந்ததாகவும், காரில் வைத்து நடந்ததாகவும் கைது செய்யப்பட்டிருக்கும் நான்குபேரும் மாறுபட்ட தகவல்களைக் கூறிவருகின்றனர்.

இதனிடையே மருத்துவமனையில் இருக்கும் பெண்ணுக்கு, உரிய சிகிச்சை வழங்கப்படும் எனவும், இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பமுடியாது எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in