கூட்டம் குறைவான பேருந்து; மருத்துவ மாணவியிடம் சில்சிமிஷம்: கம்பி எண்ணும் கண்டக்டர்!

கூட்டம் குறைவான பேருந்து; மருத்துவ மாணவியிடம் சில்சிமிஷம்:  கம்பி எண்ணும் கண்டக்டர்!

ஓடும்பேருந்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அவர் தன் சொந்த ஊருக்குச் செல்வதற்காக கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து ஏறினார். தஞ்சாவூரில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி செல்லும் பேருந்தில் அவர் ஏறினார். பேருந்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

பேருந்து வேலூர் நோக்கிச் சென்றபோது, மாணவியின் அருகில் வந்து அமர்ந்த பேருந்தின் நடத்துனர் அரியலூர் ஜெயம்கொண்டம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த நீலமேகம்(46) மாணவியிடம் திடீரென சில்மிஷத்திலும் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி வேறு இடத்திற்கு மாறினார். இதுதொடர்பாக வேலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் போக்குவரத்து அதிகாரிகளிடம் மருத்துவ மாணவி புகார் கொடுத்தார்.

இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் அவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்துனர் நீலமேகத்தைக் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in