அத்துமீறிய பக்கத்து வீட்டு வாலிபர்; காட்டிக்கொடுத்த சிறுமி: தப்பியோட முயன்றபோது சிக்கினார்

அத்துமீறிய பக்கத்து வீட்டு வாலிபர்; காட்டிக்கொடுத்த சிறுமி: தப்பியோட முயன்றபோது சிக்கினார்

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் பத்துவயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்துப் போலீஸில் ஒப்படைத்தனர்.

குமரி மாவட்டம், வில்லுக்குறியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்(31) கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது வீட்டின் அருகில் ஒரு வயோதிகப் பெண்ணின் வீடு உள்ளது. அவரது மகள், பேத்தியோடு அந்த வீட்டிற்கு வந்திருந்தார். பத்து வயதாகும் பேத்தியை வீட்டில் விட்டுவிட்டு தாயும், மகளும் கடைக்கு சென்றிருந்தனர். பத்துவயது சிறுமி வீட்டு வாசலில் நின்றபோது அவரிடம் ஜெகதீஸ் அத்துமீறி நடந்துள்ளார். இதனால் அந்தச் சிறுமி வாசலில் அழுதுகொண்டே இருந்தது.

வீட்டுக்கு தன் தாயும், பாட்டியும் வந்ததும் இதை அழுதுகொண்டே சொல்லவே, அந்நேரத்தில் தன் வீட்டு வாசலில் நின்ற ஜெகதீஸையும் சிறுமி அடையாளம் காட்டியது. இதுகுறித்து தெரியவந்ததும் பொதுமக்கள் சேர்ந்து ஜெகதீஸை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து குளச்சலில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் ஜெகதீஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in