மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர்கள் 2 பேர் தலைமறைவு, சஸ்பெண்ட்: பாய்ந்தது போக்சோ வழக்கு

ஆசிரியர்கள் 2 பேர் தலைமறைவு
ஆசிரியர்கள் 2 பேர் தலைமறைவுமாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர்கள் 2 பேர் தலைமறைவு: பாய்ந்தது போக்சோ வழக்கு

கிருஷ்ணகிரி அருகே அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் 2 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் எலத்தகிரியில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வரலாறு ஆசிரியராக பணிபுரியும் ராஜா (59) என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஆய்வக உதவியாளரான நடேசனும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 2 பேர் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, 2 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in