7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கால் கணித ஆசிரியர் எஸ்கேப்

7-ம் வகுப்பு மாணவிக்கு  பாலியல் தொல்லை: போக்சோ வழக்கால் கணித ஆசிரியர் எஸ்கேப்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் கிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு திருப்பதிசாரம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பவர் ஆம்ஸ் நல்லதம்பி. இவர் இப்பள்ளியில் படிக்கும் 7-ம்வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி வேறு ஒரு பெண் ஆசிரியையிடம் தெரிவித்தார். அவர் இதுகுறித்துத் தலைமையாசிரியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கும் புகார் சென்றது. அவர்களும் விசாரணையைத் தொடங்கினர். அது உறுதிசெய்யப்படவே, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார், ஆசிரியர் ஆம்ஸ் நல்லதம்பி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் தகவல் தெரிந்ததும் ஆசிரியர் ஆம்ஸ் நல்லதம்பி தலைமறைவாகி விட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in