8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை: யோகா ஆசிரியருக்கு ஆயுள்தண்டனை

8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை: யோகா ஆசிரியருக்கு ஆயுள்தண்டனை

எட்டு வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் யோகா ஆசிரியருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜேம்ஸ் மரியஞானராஜ். இந்த பள்ளியில் படிக்கும் எட்டு வயது மாணவி, கடந்த 2015 ஜூலை 6-ம் தேதி பள்ளி முடிந்து, யோகா பயிற்சிக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுசம்பந்தமாக அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார், அவரை கைது செய்தனர். பின் யோகா ஆசிரியர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in