தனியாக சென்ற 25 பெண்களிடம் பாலியல் சீண்டல்: சிசிடிவியால் சிக்கிய இளைஞர்

கைது செய்யப்பட்ட தனுஷ்.
கைது செய்யப்பட்ட தனுஷ்.

சென்னையில் தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர். சில வாரங்களில் மட்டும் அவர் 25 பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னையில் மயிலாப்பூர், அபிராமம் ஆகிய பகுதிகளில் தனியாகச் செல்லும் இளம் பெண்களிடம் ஒரு இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. நேற்று முன்தினம் சி.பி ராமசாமி சாலையில் சைக்கிளில் கல்லூரி சென்ற மாணவியிடம் இந்த இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து அவரது தந்தையிடம் தெரிவித்தார்.

அவர் அபிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பாலியலில் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரின் டூவீலர் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது, அவர் கோட்டூர்புரத்தை சேர்ந்த தனுஷ்(25) என்பது தெரிய வந்தது. காதல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு குழந்தை உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. பட்டதாரியான தனுஷ், தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். சாலையில் தனியாகச் செல்லும் பெண்கள், நடைபயிற்சி செல்லும் பெண்களைக் குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 25 மேற்பட்ட பெண்களிடம் தனுஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையறிந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in