16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியார், மனைவியுடன் கைது

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியார், மனைவியுடன்  கைது

சென்னையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கிறிஸ்துவ சபை பாதிரியார் , மனைவியுடன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் கிறிஸ்துவ சபை நடத்தி வருபவர் பாஸ்டர் ஷெர்ரார்டு மனோகர் (55). இவர் தனது கிறிஸ்துவ சபைக்கு வரும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன் அவரது வாட்ஸ் அப்பிற்கு ஆபாச படம் அனுப்பியுள்ளார். கடந்த 6 மாதங்களாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த நிலையில் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு அவரது மனைவி ஹெலன், கார் ஓட்டுநர் ஜீவாஜேக்கப், வீட்டு வேலைக்காரப்பெண் விஜயலட்சுமி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில் கிறிஸ்துவசபை ஊழியர் மூலம் இந்த தகவல் சிறுமியின் பாட்டிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிரியார் ஷெர்ரார்டு மனோகர் மீது சிறுமியின் பாட்டி புகார் அளித்தார். இதன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமிக்கு பாதிரியார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது வந்ததும், அவரது மனைவி மற்றும் வீட்டு ஊழியர்கள் இதற்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் உறுதியானது.

இதனையடுத்து பாஸ்டர் ஷெர்ராடு மனோகர் உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பாதிரியார் ஷெர்ரார்டு மனோகர், அவரது மனைவி ஹெலன் ஆகிய இருவரையும் மகளிர் போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார் ஓட்டுநர் ஜீவாஜேக்கப், வேலைக்காரப் பெண்மணி விஜயலட்சுமி ஆகியோரை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in