ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை; சிறுமிகளிடம் அத்துமீறிய மடாதிபதி: அதிரடி காட்டும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை; சிறுமிகளிடம் அத்துமீறிய மடாதிபதி: அதிரடி காட்டும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!
Bala K

சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கர்நாடக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழக்கைத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கர்நாடகா, சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கிப் படித்து வந்த 15 மற்றும் 16 வயது மாணவிகள் இரண்டு பேரை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் போலீஸார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கு சித்ரதுர்கா போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது சித்ரதுர்கா போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தப்பியோடியதாகக் கூறப்பட்ட சிவமூர்த்தி முருக சரணரு சித்ரதுர்காவில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை கைவிட்டது. இந்நிலையில் மடாதிபதி மீது பாலியல் புகார் கூறிய இரண்டு மாணவிகள் சித்ரதுர்கா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களது வாக்குமூலம் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவமூர்த்தி முருக சரணருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும் 7 நாட்களுக்குள் இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in