பிறந்த தேதியை சரிபார்த்த பிறகா உடலுறவு கொள்ள முடியும்?- கேள்வி எழுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம்!

பிறந்த தேதியை சரிபார்த்த பிறகா உடலுறவு கொள்ள முடியும்?- கேள்வி எழுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம்!

பிறந்த தேதியைச் சரிபார்த்த பிறகா பெண்ணுடன் ஒருவர் பாலியல் உறவு கொள்ள முடியும் என பாலியல் வழக்கு ஒன்றில் டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் ‘இந்த வழக்கில் தொடர்புடைய ஆணும், பெண்ணும் ஏற்கெனவே நெருக்கமாகப் பழகியுள்ளனர். 2019 மற்றும் 2021-ல் தன்னை பாலியல் உறவு கொண்டதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண், 2022 ஏப்ரலில்தான் புகார் அளித்துள்ளார். மேலும், தான் ஒரு சிறுமி என்பதைக் கருத்தில் கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரும்படி மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் வயதை உறுதி செய்வதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், மூன்று விதமான தேதிகள் உள்ளன. ஆதாரின் அடிப்படையில் பார்த்தால், அவர் சிறுமியல்ல என்பது உறுதியாகிறது. இருவரும் நன்கு நெருங்கிப் பழகிய பின்னரே, பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டுள்ளனர். பெண்ணின் வயதை ஒருவர் சரிபார்த்தா அவருடன் பாலியல் உறவு கொள்ள முடியும்? இந்த விவகாரத்தைப் பார்க்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவரை வலையில் சிக்க வைக்க மனுதாரர் முயன்றுள்ளது தெரிகிறது. இந்த பெண்ணின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது’ என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in