இரவில் டெல்லி மகளிர் ஆணைய தலைவியிடம் பாலியல் அத்துமீறல்: கார் டிரைவர் கைது!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால்
டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால்

டெல்லி மகளிர் ஆணைய தலைவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தனது ட்விட் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "நேற்று இரவு டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன். கார் ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். நான் அவரைப் பிடித்தபோது, கார் கண்ணாடியில் என் கையைப் பூட்டி என்னை இழுத்துச் சென்றார். கடவுள் உயிரைக் காப்பாற்றினார். டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவி பாதுகாப்பாக இல்லை என்றால், நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இதையடுத்து, கோட்லா முபாரக்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குடிபோதையில் ஸ்வாதி மாலிவாலிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 47 வயதான ஹரிஷ் சந்திரா என்ற கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, காரையும் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in