13 வயதிலிருந்தே மகளுக்கு பாலியல் வன்கொடுமை; 5 ஆண்டுகளாக சம்மதித்த தாய்; சிக்கிய சென்னை சப்-இன்ஸ்பெக்டர்

போக்சோவில் கைதான உதவி ஆய்வாளர் பாண்டியராஜ்
போக்சோவில் கைதான உதவி ஆய்வாளர் பாண்டியராஜ்

கள்ளக் காதலியின் மகளை 13 வயதிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் (50). இவர் சென்னை மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், வில்லிவாக்கத்தில் வசித்து வந்த கணவனை பிரிந்து வாழும் பெண்ணுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த பெண் குழந்தைக்கு 13 வயது பூர்த்தியடைந்தது. இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் தாயுடன் தகாத உறவில் இருந்தபோது 13 வயதிலிருந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிறுமியிடம் அத்துமீறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் மீண்டும் அந்த பெண்ணை, பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனைப் பொறுத்து கொள்ள முடியாத அந்த பெண், நேற்று வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் மீது புகார் அளித்தார்.

இளம்பெண்ணின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய போலீஸார் அந்த பெண் சிறுமியாக இருந்த காலகட்டத்தில் பலமுறை மிரட்டி காவல் உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு செய்ததும், தற்போது கல்லூரி பயிலும் அவரை மிரட்டி பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீஸார், காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொதுமக்களுக்கு பாதுகாவலனாக இருக்க வேண்டிய காவலரே 13 வயதில் இருந்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், ஆதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in