இவர்களுக்கெல்லாம் அரசு வேலை கிடையாது... முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
Updated on
1 min read

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை அரசு வேலைகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் நேற்று இரவு சட்டம் ஒழுங்கு தொடர்பாக மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், பில்வாரா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் காவல் துறை கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்யப்படும். ​​பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களை தடுப்பதே எங்களது முதன்மையான பணியாகும். பாலியல் குற்றவாளிகளின் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். அவர்களின் குணநலச் சான்றிதழில் அவர்களின் குற்றத்தைக் குறிப்பிட வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளுடன் அவர்கள் வேலைக்கு விண்ணப்பித்தால், அத்தகைய நபர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in