வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்: பெண் உள்பட 5 பேர் சிக்கினர்

வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்: பெண் உள்பட 4 பேர் கைது
வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்: பெண் உள்பட 4 பேர் கைதுவாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்: பெண் உள்பட 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்துவந்த பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜபாளையம் சப்- இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் விசாரணை செய்தனர். அப்போது பிச்சைக்கனி என்பவரது வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாகத் தகவல் கிடைத்தது.

அவர்கள் பிச்சைக்கனிக்கு சொந்தமான வீட்டில் ஆய்வு செய்தபோது, ராஜபாளையத்தைச் சேர்ந்த சுகந்தி(45) என்ற பெண் இருந்தார். அவர் அங்குவைத்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துகுமார்(36), கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உதயகுமார், கிரிவலம் வந்த நல்லூரைச் சேர்ந்த பால்ராஜ்(46) ஆகியோர் இதில் புரோக்கர்களாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. போலீஸார் விசாரணைக்குச் சென்றிருந்தபோது அவர்களும் வீட்டில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த போலீஸார், வீட்டின் உரிமையாளர் பிச்சைக்கனியையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் நான்கு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in