ஜார்க்கண்டில் நிலக்கரிச் சுரங்க விபத்து: இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

ஜார்க்கண்டில் நிலக்கரிச் சுரங்க விபத்து: இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு
மாதிரிப் படம்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில், கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அந்தச் சுரங்கத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள், இந்த விபத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

அதிகமான மலைப் பகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், கனிம வளமும் அதிகம். கனிமச் சுரங்கங்கள் அமைத்து மலைவளங்களையும் அங்குள்ள மக்களையும் நிறுவனங்கள் சுரண்டிக்கொண்டிருப்பதாக விமர்சனங்கள் உண்டு. இதில் சட்டவிரோதமாகச் செயல்படுபவர்களும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.