
ஒடிசாவில் இன்று அதிகாலையில் லாரி மீது மினி டிரக் நேருக்கு நேர் மோதியதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் கொல்கத்தாவில் இருந்து புவனேஸ்வர்க்கு கோழித்தீவனம் ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினி டிரக் கோழித்தீவனம் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதியதில் அதில் இருந்தவர்கள் உடல்கள் நசிங்கின.
இந்த விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த தர்மசாலா போலீஸார், தீயணைப்பு படையினருடன் வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களைக் கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பார்ச்சானா சமூக சுகாதார மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மூடுபனி அதிகமாக உள்ளது. இன்று அதிகாலையில் விலகாத மூடுபனியால் இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.