மகளின் ஆபாச படத்தை இணையத்தில் வெளியிட்ட ஆண் நண்பர்: தட்டிக்கேட்ட பிஎஸ்எஃப் வீரர் படுகொலை

மகளின் ஆபாச படத்தை இணையத்தில் வெளியிட்ட ஆண் நண்பர்: தட்டிக்கேட்ட பிஎஸ்எஃப் வீரர் படுகொலை

மகளின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஆண் நண்பரை தட்டி கேட்ட பிஎஸ்எஃப் வீரர் படுகொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்திருக்கிறது.

குஜராத் மாநிலம், நாடியாட்டில் உள்ள சக்லாசி கிராமத்தை சேர்ந்தவர் ஷைலேஷ் ஜாதவ். இவர் பிஎஸ்எஃப் வீரர் மெல்ஜிபாய் வகேலா என்பவரின் மகளின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் அதிர்ச்சியடைந்துள்ளார் தந்தை. இதையடுத்து, ஷைலேஷ் ஜாதவ் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வகேலா தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது, இணையதளத்தில் மகளின் படத்தை வெளியிட்டது ஏன்? என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், ஷைலேஷ் ஜாதவின் தந்தை தினேஷ் ஜாதவ், மாமா அரவிந்த் ஜாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வகேலாவையும், அவரது மகனையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் வகேலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த வகேலாவின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் ஷைலேஷ் ஜாதவ், அவரது தந்தை தினேஷ் ஜாதவ், மாமா அரவிந்த் ஜாதவ் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளின் ஆபாச படத்தை இணையத்தில் வெளியிட்டதை தட்டிக்கேட்ட தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in