மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி தனித்துப் போட்டி... அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி!

பிரகாஷ் அம்பேத்கர்
பிரகாஷ் அம்பேத்கர்

மகாராஷ்டிராவில் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி (விபிஏ), தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதால் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநில அளவில் மகா விகாஸ் அகாதி (எம்விஏ), தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலுவான சவாலை ஏற்படுத்த எம்விஏ கூட்டணியில் இணைய, அம்பேத்கர் பேரனான பிரகாஷ் அம்பேத்கரின் விபிஏ கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்நிலையில் விபிஏ தலைமை செய்தித் தொடர்பாளரும், மாநில துணைத் தலைவருமான சித்தார்த் மோக்லே சமீபத்தில் கூறுகையில், "மக்களவைத் தேர்தலுக்கு எம்விஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடிப்பதற்கு ஏற்பட்டு வரும் தாமதத்துக்கு தங்கள் கட்சி தான் காரணம் என ஒரு தவறான பிம்பம் சித்தரிக்கப்பட்டு வருகிறது" என குற்றம் சாட்டியிருந்தார்.

மகா விகாஸ் அகாதி கூட்டணி தலைவர்கள்
மகா விகாஸ் அகாதி கூட்டணி தலைவர்கள்

பிரகாஷ் அம்பேத்கர், ஓபிசி கூட்டமைப்பு மற்றும் மராத்தா சமூகம் போன்ற சமூக அடிப்படையிலான அமைப்புகளுடன் கைகோர்த்துள்ளார். இந்நிலையில் கூட்டணியில், மனோஜ் ஜரங்கே பாட்டீலை இணைத்துக்கொள்ள எம்விஏ தயாராக இல்லை எனவும், தங்கள் வம்சாவளி அரசியலைப் பாதுகாக்க விபிஏ-யை பயன்படுத்த எம்விஏ விரும்புவதாகவும் பிரகாஷ் அம்பேத்கர் குற்றம்சாட்டினார்.

இதனால் அவரை கூட்டணியில் இணைப்பதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், அகோலாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்களை பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்தார். ராம்டெக் தொகுதிக்கான வேட்பாளர் பிற்பகலில் அறிவிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் பிரகாஷ் அம்பேத்கரின் விபிஏ தனித்து போட்டியை அறிவித்தது மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in