`நீங்கள் இறந்துவிட்டதாக காட்டுகிறது'- ரேஷன் அட்டை விண்ணப்பித்தவருக்கு அதிர்ச்சிக் கொடுத்த இ-சேவை ஊழியர்கள்!

ரேஷன் அட்டை
ரேஷன் அட்டை`நீங்கள் இறந்துவிட்டதாக காட்டுகிறது'- ரேஷன் அட்டை விண்ணப்பித்தவருக்கு அதிர்ச்சிக் கொடுத்த இ-சேவை ஊழியர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிருடன் இருக்கும் நபரை இறந்ததாகக் கூறி ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கச் செய்து கவனக்குறைவாக நடந்துக்கொண்ட இ-சேவை மைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெருநகர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் முருகன் தேவி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கணபதி கடந்த 2017-ம் ஆண்டு உடல்நிலைக் குறைவால் இறந்துவிட்டார்.

இதனிடையே இளைய மகன் தங்கராஜுக்கு இரண்டரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தங்கராஜ் தனது அம்மா தேவியிடம் குடும்ப அட்டையிலிருந்து தனது பேரை நீக்கிக் கொடுக்குமாறு கூறியுள்ளார். தேவி அருகே உள்ள பெருநகர் ஊராட்சிமன்ற கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்திற்குச் சென்றுள்ளார். இ-சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியரிடம், தேவி தனது இளைய மகன் தங்கராஜ் உடைய திருமணப் பத்திரிகையைக் கொடுத்து பேரை நீக்க கூறியுள்ளார்.

பின்னர் மூத்த மகனும் இறந்துவிட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழை அளித்துள்ளார் இ-சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியர். கவனக்குறைவாக உயிருடன் உள்ள தங்கராஜையும் இறந்துவிட்டதாகக் கூறி குடும்ப அட்டையில் இருந்து பேர் நீக்கி உள்ளார்.

இதனை அறியாமல் தங்கராஜ் புதிய குடும்ப அட்டைப் பெறுவதற்காக உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றபோது நீங்கள் இறந்து விட்டதாகக் காட்டுகிறது என அரசு ஊழியர்கள் தெரிவித்ததால் தங்கராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்துக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் குறைத் தீர்ப்பு நாள் கூட்டத்தில் தங்கராஜ் இருமுறை மனு அளித்துள்ளார். ``இருமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் குறைத் தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளித்தோம். எந்த ஒரு பயனும் இல்லை'' என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முறையாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளாமலேயே இருப்பவரை இறந்துவிட்டதாகக் குடும்ப அட்டையிலிருந்து பேர் நீக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தங்கராஜ் மனைவி கருவுற்று உள்ளதால் எந்தஒரு அரசு சலுகையும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in