தொடர்ந்து டூவீலர் திருட்டு; பஸ் நிலையத்தில் மப்டியில் சுற்றிய போலீஸ்: சிக்கிய 9-ம் வகுப்பு மாணவர்கள்

தொடர்ந்து டூவீலர் திருட்டு; பஸ் நிலையத்தில் மப்டியில் சுற்றிய போலீஸ்: சிக்கிய 9-ம் வகுப்பு மாணவர்கள்

திருநெல்வேலியில் தொடர்ந்து டூவீலர் திருட்டுகளில் ஈடுபட்டுவந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்த எட்டு டூவீலர்களும் மீட்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகருக்கு உட்பட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடுபோய் வந்தது. இதுகுறித்துப் போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவரை வழியனுப்ப வந்த ஒருவர் பைக்கை பஸ் ஸ்டான்ட் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது பைக்கைக் காணவில்லை. இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸார் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினர். அதில் சில சிறுவர்கள் சேர்ந்து பைக்கை திருடுவது பதிவாகி இருந்தது. அதனால் இன்று மீண்டும் போலீஸார் அதே பஸ் ஸ்டான்டில் மப்டியில் சுற்றிவந்தனர். அப்போது அங்கு இன்றும் பைக் திருடிய சிறுவர்களைப் போலீஸார் சுற்றிவளைத்தனர். மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துப்போய் விசாரித்ததில் அவர் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிப்பது தெரியவந்தது. அவர்கள் இதற்கென ஏராளமான திருட்டுச் சாவிகளும் வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு வேறு எந்த குற்றச் சம்பவங்களோடு தொடர்புள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in